புதினங்களின் சங்கமம்

நல்லூர் பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் சபையில் 11 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தும் 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தும் ஒருவர் நடுநிலை வகித்ததன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்த போதிலும் ஏனைய கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் இருவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஐந்து பேர் விடுதலைக் கூட்டணி சேர்ந்த உறுப்பினர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் எதிர்த்து வாக்களித்தமையால் 2021 ம் ஆண்டுவரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.