புதினங்களின் சங்கமம்

பளையில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் துரத்தித் துரத்தி வெட்டிப் படுகொலை!!(Photos)

யாழ்ப்பாணம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பகாமம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட தம்பகாமம் ஊடாக மாமுனை செல்லும் வீதியில் செம்பியன்பற்று வடக்கு மாமமுனையை சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் என்பவரே இனந்தெரியாத நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.