Home புதினங்களின் சங்கமம் போதைப்பொருள் கடத்தல் காவாலி பொலிஸ் நிலையத்தில் பலியானதால் பதற்றம்!!

போதைப்பொருள் கடத்தல் காவாலி பொலிஸ் நிலையத்தில் பலியானதால் பதற்றம்!!

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிரிவத்துடுவை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இஷார ஹர்ஷ குமார என்பவர் ஆவார்.

பொலிஸ் காவலில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ; குற்றம் சுமத்தும் உறவினர்கள் | Father Of Two Dies In Police Custody

தாக்குதல்

பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நேற்று (25) காலை சந்தேகநபரைப் பார்வையிடுவதற்காக உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போது, பொலிஸார் அவரைத் தாக்கியுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர் உறவினர்களின் தீவிர கோரிக்கைக்கு அமைவாக சந்தேகநபரை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்த போதிலும், அதற்கு முன்னரே அவர் உயிரிழந்திருந்ததாக உறவினர்கள் தீவிரமாகக் குற்றம் சுமத்துகின்றனர்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments