புதினங்களின் சங்கமம்

பெருமளவு பணத்தை வாங்கிக் வாகனத்தில் சடலத்தை கொண்டு வந்து சுகாதார அமைச்சின் ஊழியர் அடாவடி!!

சுகாதார அமைச்சில் வேலை செய்யும் ஒருவர் தனிமைபடுத்தல் சட்டத்தை மீறி கொழும்பில் இருந்து ஒரு தொகைப் பணம் பெற்று இறந்த ஒருவரின் உடலை தனியார் வாகனம் ஒன்றில் கொண்டு வருகிறார். அவரை உள்ளே நுழையாது தடுத்து நிறுத்தியமைக்கு அமைச்சு மூலம் PHI வேலையையே இல்லாமல் பண்ணுவதாக வெருட்டுகிறார்.
அமைச்சில் வேலை செய்யும் ஒருவர் எவ்வாறு தனியார் வாகனத்தில் இறந்த உடலை கொண்டு வரலாம் என பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் தனது முகநுாலில் பதிவு செய்துள்ளார்.