வெலியோயாவில் தமிழ் வைத்தியர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி!! வைத்தியர்கள் கடும் விசனம்!!
வெலிஓயாவில் உள்ள சம்பத்நுவரமாவட்ட வைத்தியசாலையின் தலைமை அதிகாரியை இராணுவ அதிகாரியொருவர் இன்று வியாழக்கிழமை அச்சுறுத்தியுள்ளாரென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாணத்தின் சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தாம் சேவையிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது.
குறித்த வைத்தியசாலையின் வைத்தியரை இராணுவ அதிகாரி பிரிகேடியர் கே.கே.எஸ்.பரகும் மிரட்டியதன் விளைவாகவே தாம் இந்த முடிவை எடுத்ததாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் கொரோனா தொற்றுப் பரவல் மக்கள் மத்தியில் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் தமது சேவையில் இருந்து விலகுவதால் மக்களே பாதிக்கப்படுவர்.


