புதினங்களின் சங்கமம்

யாழ் கோண்டாவிலில் காவாலிக்குழுவினால் அரசியல்வாதி ஒருவரின் வீடு அடித்து நொருக்கப்பட்டது!! (Photos)

யாழ்.கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று இரவு 8.30 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை
மறைத்தவாறு வாள்கள், நுழைந்த வாள்வெட்டு கும்பல் இந்த தாக்குதலை
நடத்தியுள்ளது.

தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும், வீட்டின் கதவு, ஐன்னல்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலை நடாத்திவிட்டு சென்ற வாள்வெட்டுக் குழுவினர்
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த சிறி ரெலோ அமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட
அமைப்பாளர் செந்துரனின் கார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில்
காரின் சிறு பகுதி சேதமாகியுள்ளது.அத்துடன் புகையிரத வீதியில் பயணித்த
முச்சக்கர வண்டி ஒன்றையும் சேதப்படுத்தி விட்டு அந்த குழு அங்கிருந்து
தப்பிச் சென்றுள்ளது/

இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவத்தினர்,பொலிசார்,விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.