புதினங்களின் சங்கமம்

74 வருடத்துக்கு முந்தைய தமிழ்த் திருமண அழைப்பிதழ் இதோ!!

1946இல் முற்போக்கான திருமண அழைப்பு ஒன்று.
மணமக்களே தமது திருமண நிகழ்வுக்கான அழைப்பை விடுத்திருக்கிறார்கள்.
எளிமையாகவும் உள்ளது.
ஆனால் இன்று. *பெற்றோர்களின் உடன்பாடில்லாது
நண்பர்களால் நிறைவேற்றி வைக்கப்படும்
திருமணங்களுக்கான அழைப்பிதழில்கூட
எமது புத்திரன்/புத்திரி என்றுதான் உள்ளன.
* பெரும்பாலான அழைப்பிதழ்கள்
அச்சகதில் உள்ள நிலையான வடிவமைப்பில் காலம்,இடம், பெயர்கள்
மட்டுமே மாற்றம் பெற்று வருகின்றன. எங்களால் பார்க்கப்படும் விடயங்களும் அவை மட்டும்தானே.

* எவ்வகையிலும் ஆங்கில வடிவம்
தேவைப்படாதவிடத்தும் அழைப்பிதழில்
பாதி அதுவாக இருக்கும். அதுமட்டுமல்ல
ஆங்கில வடிவம்தான் முதலிலிருக்கும்.
தமிழ் கீழேதான்.

* அழைப்பிதழ்கள் விடயம் தருவதற்கு
மேலாக படிநிலை( அந்தஸ்து/Status)யின்
குறியீடாகவும் மாறிவிட்டது. இதனால்
அழைப்பிதழ் ஒன்றுக்கான செலவு ரூபா
500 ஐத் தாண்டி 1000வரையும் செல்கிறது.
எதிர்காலத்தில் இல்லறத்தில் இணையவுள்ளவர்களே கொஞ்சம் மாற்றி
சிந்தியுங்களே!
படம்:

Aaruthirumurugan Aaruthirumurugan