புதினங்களின் சங்கமம்

சுமந்திரனுடன் இரகசிய ஒப்பந்தம்??? மணிவண்ணனுக்கு எதிரான மனுவை மீளப்பெற்றார் சுமந்திரன்!!

யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்காத ஒருவர் யாழ்.மாநகரச சபை உறுப்பினராக அங்கத்துவம் வகிக்க முடியாது என்பதால் அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று மீறப்பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த மனுவுக்கு அமைவான விசாரணையின் அடிப்படையில் மணிவண்ணன் மாநகரசபை அமர்வுகளில் பங்கேற்க கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

குறித்த இடைக்காலத் தடைக்கு ஆட்சேபனை தெரிவித்து வி.மணிவண்ணனால் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில், வி.மணிவண்ணன் மாநகர சபை உறுப்புரிமை வழங்கிய கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமையால் குறித்த மனுவின் ஊடாக நீதிமன்ற நேரத்தை விரயமாக்கவிரும்பவில்லை என்று தெரிவித்து சுமந்திரன் தமது மனுவினை மீளப் பெற்றுள்ளதாக மணிவண்ணன் தரப்பு சட்டத்தரணி உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களுக்கு இடையில் பிளவு நிலை காணப்படும் சூழலில் மணிவண்ணனை மீண்டும் மாநகரசபைக்குள் செல்வைப்பதற்கான உத்தியாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் நோக்கர்கள்.

 

இதே வேளை மணவண்ணனுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டதாலேயே சுமந்திரன் மணிவண்ணனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றதாகவும் யாழ் மாநகரசபை மேயருடன் தற்போது சுமந்தரின் முரண்பட்டுள்ளார் எனவும் அவரை அகற்றி மணிவண்ணனை மேயராக்கும் திட்டம் சுமந்திரனிம் உள்ளதாகவும் யாழ் மேயரின் தரப்பைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.

இதே வேளை மணிவண்ணனை சைக்கிள் கட்சியினர் மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்காக அவர்களின் பக்கத்தில் தொப்பியை கொடுத்துள்ளதாக சுமந்திரன் தரப்பைச் சேர்ந்தவர்கள் சுமந்திரனின் இராஜதந்திர நகர்வு என அதனை வர்ணித்து வருகின்றனர்.