புதினங்களின் சங்கமம்

கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவரின் தாயார் தனிமைப்படுத்தலில் உயிரிழப்பு!

கொரோனா தொற்று உறுதியான பெண் ஒருவரின் தாயார் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சற்று முன்னதாக உயிரிழந்துள்ளார்.

குறித்த தாயின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னதாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கலகந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த யக்கல பகுதியைச் சேர்ந்த 64வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறாத நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.