புதினங்களின் சங்கமம்

யாழ் புங்குடுதீவில் ஐயர் ஒருவர் குளக்கரையில் அடித்துக் கொலை!!

புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது.

அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், பசுவதைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பூசகர் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தடவியல் பொலிஸார் யாழ்ப்பாணத்திலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.

<p>சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>

 

<p>தடவியல் பொலிஸார் யாழ்ப்பாணத்திலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.</p>