வவுனியாவில் தமிழ் மாணவிகள் இருவரைக் காணவில்லை!! முஸ்லீமுக்குதொடர்பா??
வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசிக்கும் இரண்டு மாணவிகளைக் காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியிலுள்ள உயர்தர வகுப்பு மாணவி ஒருவரின் வீட்டில் தங்கி நின்று சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவி ஒருவரும் கல்வி கற்று வந்தார்.
சாஸ்திரி கூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியின் தாயார் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை காலை வேலைக்குச் சென்றிருந்தார். இந்தநிலையில், பாடசாலையில் இருந்து குறித்த இரு மாணவிகளையும் பரீட்சைக்கான அனுமதி அட்டையைப் பெற அனுப்பி வைக்குமாறு தாயாருக்குத் தொலைபேசியில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து தனது மகளின் தொலைபேசிக்குத் தாயார் அழைப்பை ஏற்படுத்தியபோது பதில் கிடைக்கவில்லை. அயல் வீட்டாருக்குத் தெரியப்படுத்தி வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு தாயார் தெரிவித்துள்ளார்.
அயலர்கள் வீட்டுக்குச் சென்றபோது குறித்த இரு மாணவிகளும் வீட்டில் இல்லை. குறித்த விடயம் தாயாருக்கு தெரியப்படுத்தப்பட தாயார் வருகை தந்து பிள்ளைகளைத் தேடியுள்ளார். அவர்களைக் காணாத நிலையில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்து விசாரணை செய்தபோதும் அவரைப் பின்னர் விடுவித்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டுப் பிரதியை பொலிசார் வழங்கவில்லை எனவும், பொலிஸார் அசமந்தப் போக்கில் செயற்படுகின்றனர் எனவும் காணாமல்போன மாணவிகளின் பெற்றோர்களும், உறவினர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

