Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ் சுன்னாகத்தில் பாடசாலை அதிபர் ஆசிரிய ஆலோசகர் பாலசுந்தரத்துடன் சேர்ந்து செய்யும் அலங்கோலம்!!

யாழ் சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாலய அதிபர் லதாவதி பத்மநாதன் பாடசாலையை தனியார் கல்விநிலையமாக மாற்றி செயற்பட்டுவருகின்றார் என பெற்றோர் மத்தியில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தனது பாடசாலையில் கல்வி கற்கும் புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு, மேலதிக வகுப்பு என கூறி வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் பி.பாலசுந்தரம் என்பவரை வரவழைத்து வகுப்புக்கள் வைக்கின்றார்.

வவுனியாவிலிருந்து வரும் பாலசுந்தரம் பாடசாலையில் சனி, ஞாயிறு தினங்களில் தலா ஆறு மணித்தியாலங்கள் பிள்ளைகளுக்கு தொடர்ந்து கொலசிப் பரீட்சைக்காக கற்பிக்கின்றாராம். இதற்காக ஒரு மணித்தியாலத்திற்கு ஆயிரம் ரூபா வீதம் 6 மணித்தியாலத்திற்கு 6 ஆயிரம் ரூபாவும் அவர் தங்கி நிற்பதற்கான செலவு, உணவுச் செலவுகளுக்காக ஒரு நாளைக்கு மேலும் 2 ஆயிரம் ரூபாவுமாக சனி ஞாயிறு தினங்களில் 16 ஆயிரம் ரூபா பெற்றோர்களால் சேர்த்து கொடுக்கப்பட்டு வருகின்றதாக பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50ற்கும் மேற்பட்ட கொலசிப் வகுப்பு பிள்ளைகள் கற்கும் அந்தப் பாடசாலையில் பாலசுந்தரத்தால் நடாத்தப்படும் வகுப்புக்கு அனைத்து மாணவர்களும் வர வேண்டும் என அதிபர் அச்சுறுத்தியே வகுப்புக்களை நடாத்துகின்றார். குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தரக்குறைவான முறையில் தமது பிள்ளைகளுக்கு கற்பிக்கின்றனரா?? ஏன் அதிபர் அந்த ஆசிரியர்களைக் கொண்டு தமது வகுப்பு பிள்ளைகளுக்கு மேலதிக வகுப்புக்களை நடாத்தாமல் வவுனியாவில் இருந்து பாலசுந்தரத்தை இறக்குமதி செய்தார் என தமக்கு தெரியவில்லை என பெற்றோர்கள் கூறுகின்றார்கள்.

இது தொடர்பாக வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் சுந்தரசிவத்துக்கு முறையிட்டும் அவர் அந்த விவகாரத்தை அதிபருக்கு சார்பான முறையில் கைக்கொள்ளுகின்றார்கள் எனவும் உடுவில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் மோகநாதன் செல்லையா அவர்கள் குறித்த விவகாரத்தை சரியான முறையில் கொண்டு செல்ல முற்பட்டு விசாரணை செய்ய முற்பட்ட போதும் சுந்தரசிவம் அதற்கு தடைவிதித்துள்ளார் எனவும் பெற்றோர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் வந்த போது குறித்த அதிபர் தனக்கு சார்பான ஒரு சில பெற்றோர்களை அவர்களுடன் சந்திக்க வைத்ததாகவும் தெரியவருகின்றது.

ஏற்கனவே லதாவதி பத்மநாதனுக்கு எதிராக சில வருடங்களுக்கு முன்னரும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.