புதினங்களின் சங்கமம்

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் 275 கிலோ கிராம் ஹெரோயினுடன் தென்னிலங்கைப் படகு

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடற்பரப்பில் சுமார் 280 கோடி ரூபா பெறுமதியான 275 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த படகொன்று கைப்பற்றப்பட்டது. அதில் 5 பயணித்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

எனினும் அந்தப் படகும் சந்தேகநபர்களும் திருகோணமலை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடற்பரப்பில் வைத்து இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

எனினும் படகு வடகிழக்கு (திருகோணமலை) கடற்பரப்பில் வைத்தே கைது செய்யப்பட்டது என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

படகில் 3 சிங்கள மீனவர்கள் உள்பட ஐந்து பேர் பயணித்துள்ளனர். அவர் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு பளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டால் வடக்கில் கைப்பற்றப்பட்ட அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.