புதினங்களின் சங்கமம்

யாழில் கிறீஸ்தவ பாடசாலைகளில் குண்டு வைக்க திட்டமா?? (Photos)

யாழில் இயங்கும் பிரபல தனியார் கிறிஸ்தவ பாடசாலைகளையும், கிறீஸ்தவ சபைகளால் நடாத்தப்படும் பாடசாலைகளையும் குறி வைத்து தீவிரவாத தாக்குதல் நடாத்த திட்டமிட்டிருப்பதாக சந்தேகிக்கபடுகின்றது. இதற்கான ஒத்திகைகள் அண்மைக்காலங்களில் நடைபெற்றுள்ளதாக சில கிறீஸ்தவ பாடசாலைகளில் கல்வி பயிலும் பிள்ளைகளின் பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அண்மையில் உடுவில் மகளீர் கல்லுாரிக்கு முன்னால் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் நடமாடித்திரிந்ததாகவும் பாடசாலை விடும் நேரத்தில் அப்பகுதியில் அவர்கள் நின்றதாகவும் சில பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை யாழ் சென்பொஸ்கோ பாடசாலையிலும் இவ்வாறான ஒத்திகைகள் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். பாடசாலை விடும் நேரத்தில் அருகில் உள்ள மரங்களின் கீழ் கரம்போட் வைத்து விளையாடுவது போல் விளையாடிக் கொண்டு பாசாலைச் சூழ்நிலையை அவதானித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனா்.

அத்துடன் சென்பற்றிக் கல்லுாரிக்கு அருகாமையிலும் சிறியரக வாகனம் ஒன்று பாடசாலை விடும் நேரங்களில் தொடர்ச்சியாக பல நாட்கள் நின்றதாகவும் அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

யாழில் சென்பொஸ்கோ பாடசாலையில் யாழ் நகரப்பகுதியில் உள்ள முக்கிய புள்ளிகளாக உள்ளவர்களின் பிள்ளைகள் படிப்பதுடன் அப்பாடசாலை இலங்கையின் சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக இருப்பதும் தாக்குதல்தாரிகளின் இலக்காக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சென்பொஸ்கோ பாடசாலைக்கு அருகில் சில நாட்களாக நடக்கும் சம்பவம் இது.

Image may contain: tree and outdoor

இதேவேளை

அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார்.

1 ஆம் தவனைக்காக விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கவிருந்த நிலையில் நேற்று ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து பாடசாலைகள் நாளை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளின் 2 ஆம் தவனைக்கான நடவடிக்கைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார்.