யாழில் ஒப்பாரி வைத்து ஆவாடை அம்மன்!! பக்தர்கள் பதற்றம்!! (Video)
கொரோனா காலத்தில் அமைதியாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்ற ஆலய பூசைகள் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தற்போது மீண்டும் கேளிக்கை நிகழ்வாக மாறத் தொடங்கிவிட்டது கடந்த சில மாதங்களில் அனைத்து ஆலயங்களிலும் ஒலிபெருக்கிகளில் அதிக இரைச்சல் கேளிக்கைகள் இன்றி மிகவும் பக்திபூர்வமாக ஆலய பூசைகள் இடம்பெற்று வந்தது தற்பொழுது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மீண்டும் காவாலிகள் அட்டகாசங்கள் ஆலயங்களில் ஆரம்பித்துள்ளது இன்றும் சங்கானை விழிசிட்டி ஆவாடை அம்மன் ஆலயத்தில் ஒலிபெருக்கிகள் பலவும், பாரிய ஒலிப்பெட்டிகளும் பொருத்தப்பட்டு சுற்றாடல் அதிரும்வண்ணம் ரீமிக்ஸ் பாடல்கள் ஒலிக்கப்பட்டுவருகிறது. வெளிநாட்டிலிருந்துவரும் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாத சில காவாலிகள் ஆலயங்களை இவ்வாறு கேளிக்கை கூடங்களாக மாற்றுவது ஆதிச்சமயமான சைவசமயத்திற்கு பாரிய அழிவை ஏற்படுத்தும். இவ்வாறான காவாலிகளின் அட்டகாசம் கொரோனாவிற்கு பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளதால் அயல் சூழலை சேர்ந்த மக்களும. மாணவர்களும் பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.


