வட்டிக்கடனால் கரடியனாற்றில் இரு பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு மரணம்!
மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள தற்கொலை மரணங்கள்.
வேண்டாம் அன்பின் உறவுகளே!
உங்கள் உயிர்களை நுண்கடன்களால் வேண்டுமென்றே அழித்து, பல உயிர்களை நடைப்பிணமாக ஆக்காதீர்கள்.
இரு அமைப்புகளில் வாங்கிய இரண்டு லெட்சம் ரூபா நுண் கடனை கட்ட முடியாமல், கணவர் எட்டு மாதங்களுக்கு முன்பே இவரை பிரிந்து சென்றுவிட்டதால், கணவர் பிரிந்து சென்றதாலும்,வட்டிக் கடனை கட்ட முடியாததாலும் மன உளைச்சலுக்குள்ளாகி இன்று (29/08) காலை தனது தங்கையின் வீட்டின் யன்னல் கம்பியில் துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்துள்ளார்.
மேசன் வேலை செய்யும் தனது கணவர் வேலைக்கு சென்றுவருவதற்காக, மோட்டார் சைக்கிளொன்றை பெற்றுக்கொடுக்கவே ஒரு அமைப்பில் ஒரு லெட்சம் ரூபா நுண் கடன் பெற்று 72000/= ரூபாவுக்கு மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
ஒரு தடவை மது போதையுடன் தலைக்கவசமின்றி மோட்டார்சைக்கிளின் லைசன் இன்சுரன்ஸ் இன்றி ஓட்டிச் செல்லுபோது போக்குவரத்து பொலிசாரால் பிடிக்கப்படு நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது, 30000/= ரூபா தண்டப்பணம் கட்ட வேண்டியிருந்ததால், அதற்கும் தனிநபரிடம் வட்டிக்கு கடன்பட்டு கட்டிவிட்டு,
மோட்டார் சைக்கிளை 50000/= ரூபாவுக்குவிற்று வாங்கிய கடனை கொடுத்திருக்கிறார்..
அவ்வாறுதான்,
ஈடுவைக்கப்பட்ட நகைகளை மீட்டெடுக்க மற்றொரு நிறுவனத்தில் ஒரு லெட்சம் ரூபா கடனாக பெற்று காலப்போக்கில் அதுவும் முடிந்து போக கணவர் மனைவியை பிரிந்து சென்றிருக்கிறார்.
ஆறு வயதுடைய மகளும், 15 மாத வயதுடைய ஆண் குழந்தையுடனும் தனியாக இருக்க முடியாமல், அருகாமையில் உள்ள தனது தங்கையின் வீட்டில் பெற்றோரோடு வசித்து வந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக பாரிய மன உளைச்சலுக்குள்ளாகி யாருடனும் சரியாக பேசாது யோசித்துக் கொண்டேயிருந்தார் என பெற்றோர் தெரிவித்தனர்.
இன்று (29/08) காலை தனது கைக் குழந்தையை குளிக்கவைத்து, படுக்கையறையில் நித்திரை செய்த பின்னர்,
அடுத்த அறைக்குள் சென்று துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டுதொங்கி இக் குழந்தையின் தாய் மரணித்திருப்பதை உறவினர்கள் கண்டுள்ளனர்.
கரடியனாறு பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

