இலங்கையில் மீண்டும் கொரோனா : ஒரே நாளில் 23 பேருக்கு தொற்று உறுதியானது!
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரே நாளில் 23 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு நேற்றைய தினம் இலங்கையில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்iயில் கொரோனா தொற்ற உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 2941 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்களில் 18 பேருக்கும், சென்னையில் இருந்து நாடுதிரும்பிய 2 பேருக்கும், துருக்கி, இந்தோனேசியா மற்றும் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவ்வொருவருக்கும் என 23 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரொனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 24 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் இதுவரை குணமடைந்து வெளியேறியவர்களது மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 789 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 141 ஆக உள்ளதுடன் இதுவரை சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை விமானப்படை முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 99 பேரின் மாதிரிகள் நேற்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் ஆறுபேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

