புதினங்களின் சங்கமம்

அம்பலமாகும் சைக்கிள் கறல்கள்!! நிழல் தலைவர் கஜேந்திரனின் அதிகாரம்! கைப்பொம்மையாக ஆடும் கஜேந்திரகுமார்!

எனக்கும் மணிவண்ணனுக்கும் இடையில் ஏற்பட்ட சிறிய மனஸ்தாபத்தால் சுமார் 5 மாதங்களுக்கு மேலாக நாங்கள் இருவரும் பேசுவது கிடையாது. அவரின் தேர்தல் பணிக்காக இதுவரை எந்த பணமும் நான் அனுப்பவில்லை. முன்னணியில் இருந்து மணிவண்ணன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இடைநிறுத்தப்பட்ட பின்னரும் தொடர்பு கொள்ளவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உப்புச் சப்பில்லாத விடயமாகவே நான் பார்கிறேன்.”

– இவ்வாறு ஹோட்வின் தினேஷ் தெரிவித்தார்.

“எமது அரசியல் இயக்கத்துக்கு விரோதமாக செயற்படும் ஹோட்வின் தினேஷ் போன்றவரிடம் இருந்து வரபிரசாதங்களை பெறமுடியாது என மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தநிலையில் அவரிடமிருந்து பண உதவியை பெற்றிருந்தீர்கள்” – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் ஆகிய பதவிகளில் இருந்து மணிவண்ணை நீக்குவதற்கான குற்றச்சாட்டுகளில் ஒன்றாக முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தொடர்புகொண்டு பேசியபோதே ஹோட்வின் தினேஷ் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: –

‘2010 ஆம் ஆண்டு தமித்தேசிய முன்னணியை ஆரம்பித்த காலத்தில் வரதராஜன் மாஸ்ரர்தான் அதன் தலைவராக இருந்தார். அவரின் தலைமை எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. ஆகவே, நான் இயல்பாகவே தமிழ்த்தேசிய முன்னணிக்கு ஆதரவாளனாக செயற்பட்டேன். ஆனாலும் 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர்தான் முன்னணியோடு தொடர்புகளை மேற்கொண்டேன். ஆரம்பத்திலிருந்து கஜேந்திரனிடம்தான் தொடர்புகளை பேணியிருந்தேன்.

“இந்தக் காலகட்டத்தில், வரதராஜன் மாஸ்ரரின் மகனால் நடத்தப்படும் “யாழ் எய்ட்” தொண்டு நிறுவனத்திற்கு ஊடாக மக்களுக்கான பணிகளைச் செய்துகொண்டுவந்தேன். உதரணமாக சொல்லவேண்டும் என்றால், நல்லூர் ஆலயத்திலோ அல்லது வேறொரு ஆலயத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் முன்னாள் போராளி ஒருவருக்கு மன்னாரில் வேளாங்குளத்தில் கடை ஒன்றை கட்டிக்கொடுத்தேன். அதனை ‘யாழ் எய்ட்” ஊடகத்தான் செய்தேன். இவ்வாறு பல உதவிகள் செய்தேன். நான் எந்தவொரு அமைப்போடும் சேர்ந்து இயங்குவது கிடையாது. விருப்பமுமில்லை என்று இல்லை. என்னாலான உதவிகளை செய்துகொண்டிருப்பவன்.

‘இதன்போதுதான் கஜேந்திரன் தொடர்புகொண்டு இவ்வளவு காசை வெளியில விட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ‘யாழ். எய்ட்” அமைப்புக்கால் செய்வது பிரச்சினையில்லை. ஆனால், இதை நாங்கள் கட்சிக்குள்ளால் செய்தால் கட்சியை வளர்க்கலாம்தானே என்றார். கஜேந்திரன் கேட்டதில் தவறில்லை.

‘இவ்வாறு பயணித்துக்கொண்டிருந்தவேளை, கஜேந்திரனுடனான தொடர்பகளைப் பேணுவது என்பது கடினமாக இருந்த காரணத்தால் மணிவண்ணன் மற்றும் சுகாஸ் ஆகயோடு பேசி பணிகளை முன்னெடுத்தேன்.

‘இந்நிலையில், இந்த வருடம் கொரனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுகாஸ் மற்றும் மணிவண்ணன் ஊடக பணிகளைச் செய்தேன். இந்தப் பணிகளின்போது, சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்குமாறு மணிவண்ணனிடம் கேட்டிருந்தேன். அப்போது, கனடாவிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பக்கூடிய நிலையிருக்கவில்லை. அதனால் மக்களுக்கு இந்த உதவியை செய்யுங்கள் என்று மணிவண்ணனிடம் கேட்டேன். அதற்கமைய அவர் அதனை செய்தார்.

‘இதற்கிடையில் கஜேந்திரன் என்னுடன் தொடர்புகொண்டு ‘மணிவண்ணனுக்கு அந்த பணம் அனுப்பத் தேவையில்லை. நான் சொல்லும் நபருக்கு அனுப்புங்கள்” – என்று ஒரு நபரை சொன்னார். எனக்கு அதில் உடன்பாடில்லாததால் மணிவண்ணனுக்கே பணத்தை அனுப்பினேன்.

‘இது இவ்வாறிருக்க, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் செந்துரனின் மரணம் நிகழ்ந்தது. அதற்கு கட்சியின் சார்பாக பணம்கொடுப்போம் என்ற நோக்கத்தில் மணிவண்ணனை தொடர்பு கொண்டேன். அவர் எடுக்கவில்லை. ஆனாலும் அவரது கணக்கிலக்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாவை போட்டுவிட்டேன். அதன்பின்னரே அவருக்கு தெரியப்படுத்தினேன். அவர் செந்தூரனின் குடும்பத்துக்கு அந்தப்பணத்தை சேர்ப்பித்தார். ஆனால், கட்சியின் வட்சப் – வைபர் குரூப்புகளில் இதனைத்தெரியப்படுத்தபடவில்லை. ஆகவே, நான் எனது முகப்புத்தகத்தில் அந்தப்பணப்பரிவர்த்தன விவரத்தை பதிவேற்றினேன். அதுதான் மணிவண்ணனுக்கும் எனக்கும் இடையிலான மனகசப்புக்கு காரணமாக அமைந்தது.

‘கஜேந்திரனுக்கும் எனக்குமான பிரச்சினையின் பின்னர் கஜேந்திரனும் கஜேந்திரகுமாரும் என்னுடன் பேசவேண்டாம் என்று மணிவண்ணனுக்கு கூறியிருந்தனராம். எனினும், நான் அனுப்பிய பணத்தை அவர் செந்தூரனின் வீட்டில் கொடுத்ததை முகபுத்தகத்தில் பதிவேற்றியது மணிவண்ணனுக்கு மனசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிந்தேன்.

‘எனவே மணிவண்ணன் மீது வைக்கபட்ட குற்றச்சாட்டுகளில், என்னிடமிருந்து பணம் வாங்கியமை தொடர்பாக வைக்கப்பட்ட விடயம் ஒரு உப்புசப்பில்லாதது. இதற்கு உதாரணமாக, முன்னணியின் வேட்பாளர் தவபாலனுக்கு கொரோனாவுக்கு முன்னர் தேர்தல் பணிக்காக 5 இலட்சம் ரூபா வழங்கியிருந்தேன். அத்துடன் அதற்கான பற்றுச்சீட்டை கட்சியின் வட்சப் – வைபர் குரூப்க்களில் பதிவேற்றினேன். கட்சிக்கு அறிவிக்கவேண்டியது என் பொறுப்பு என்பதால் பகிர்ந்தேன். இவ்வாறு பகிர்ந்தவுடன் தவபாலன் என்னுடன் தொடர்புகொண்டு ‘ஏன் அண்ணா பகிர்ந்தீர்கள். எனக்கு கட்சி 5 லட்சம் ரூபா தருவதாக அறிவித்திருந்தது. இதனால் இப்போது அதனை தருவதற்கு கட்சி மறுத்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

நான் தனிநபரான தவபாலனுக்கு தரவில்லை. முன்னிணியின் வேட்பளருக்குத்தான் தந்தேன். ஆகவே, அதனை அறிவிக்கவேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது. சரி அந்த 5 லட்சத்தையும் நான் தருகின்றேன். கிழக்கில் நல்ல முடிவுகளை எடுத்துத்தரவேண்டும்’ – என்றேன். ஆனால், கொரோனா பிரச்சினைகளினால் என்னால் மீதி தொகையில் ஒன்றரை லட்சத்தையே ஆகஸ்ட் 2 ஆம் திகதி கொடுக்கக்கூடியதாக இருந்தது.

‘இதேவேளை, மணிவண்ணனுடன் சேர்ந்து வேலைசெய்ய விரும்பியதற்கு காரணம், முன்னணியில் உள்ள அனேகமான பிரச்சினைகளுக்கு மணிவண்ணன் ஊடாக தீர்வு பெறுவது இலகுவாக காணப்பட்டது. முன்னணியை பதிவுசெய்வதில் ஆரம்ப காலங்களில் எதிர்த்தவர்களில் மணிவண்ணனும் ஒருவர். ஆனால், பிற்பட்ட காலங்களில் பதிவு விடயத்தை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை மணி ஏற்றுக்கொண்டார். தேர்தல் முடிந்தவுடன் பதிவு நடவடிக்கை குறித்து பேசலாம் என்று தெரிவித்தார். இந்த விடயத்திடல் சுகாஸ் – காண்டிபன் முன்னின்றாலும் நாம் அவர்களை ஆதரிக்க தயாரகவே இருக்கிறோம். ஆனால், அவர்கள் கஜேந்திரனின் கையாட்களாகவே இருக்கின்றனர்.

‘தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்சியாக பதிவு செய்யப்படவேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்டு கட்சிக்கான யாப்பு உருவாக்கப்படவேண்டும். சகல பொறிமுறைகளும் சரியான விதத்தில் இருக்கவேண்டும். மக்களின் கட்சியாக உருவாக்கப்படவேண்டும். இதுதான் பலரது விருப்பமும். அந்த விருப்பத்தை மணிவண்ணன் ஊடக வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன்.

‘கஜேந்திரகுமார் பெயரளவில் மட்டுமே தலைவர் இருக்கின்றார். நிதி – நிர்வாக முறைகளில் கஜேந்திரகுமார் தலையிடுவதpல்லை. தேவையில்லாத குற்றாச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்க விருப்பமில்லாத காரணத்தினாலேயே இவற்றிலிருந்து கஜேந்திரகுமார் விலகியிருக்கின்றார். அது கஜேந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் முனனணி வருவதற்கு வாய்பாக அமைந்தது. கூட்டங்களை கூட்டுவது, அதனை செய்துவிட்டு கஜேந்திரகுமாருக்கு சொல்வது, அவர் அந்தக்கூட்டத்திற்கு போய் பேசுவதும்தான் தலைவர்; செய்யும் வேலை. கஜேந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு கஜேந்திரகுமார் கட்டுப்படுவார். இதுதான் முன்னணியில் நடப்பது.

“இதேசமயம், முன்னணியில் பொருளாளர் என்ற ஒருவரே இல்லை. பணம் அனுப்பவேண்டும் என்று, யார் பொருளார் என்று கேட்டால், நாளுக்கொரு பெயர் முன்மொழியப்படும். முன்மொழியப்படும் நபரிடம் கேட்டால், அவர் தான் இல்லை என்றுவிட்டு பிறிதொரு நபருடைய பெயரை சொல்வார்.

‘நான் முன்னணியுடன் நெருங்கி வேலை செய்தவன் என்ற அடிப்படையில் அதன் ஓட்டை உடைசல்கள் அனைத்தையும் அறிந்தவனாக உள்ளேன். தனிநபர் ஆளுகைக்குள்தான் முன்னணி உள்ளது. இதனால்தான் முன்னணியை பதிவுசெய்ய கோருகின்றோம். கட்சியை பதிவுசெய்தால்மாத்திரமே குறைபாடுகளை நிவர்த்தி செய்யமுடியும்” – என்றார்