புதினங்களின் சங்கமம்

தமிழரசுக் கட்சியை இரண்டாகப் பிரிப்பேன்!! சுமந்திரன் கோபாவேசம்!!

புளொட் அமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கத்தை கொலை செய்து வீதியில் போட்ட ரெலோ கட்சியினரே என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன்
இவ்வாறு படுகொலைகளில் ஈடுபட்ட கட்சியினருக்கு திடீரென புளொட் மீது கரிசனை வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

புளட் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான தர்மலிங்கத்தை கொலை செய்தவர்கள் ரொலோ கட்சியினர். அதுமட்டுமல்லாது வீதிகளில் இருந்து தலையாட்டி பலரை காட்டிக்கொடுத்து படுகொலைக்கு காரணமாக இருந்தவர்களும் அவர்களே.

கூட்டமைப்பின் பிரதான கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சியே அந்த தமிழரசுக்கட்சி உடனடியாக மறு சீரமைக்கப்பட வேண்டும் இல்லையேல் இரண்டாகப் பிளவு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றார்.