யானை தாக்கி படுகாயமடைந்த யாழ் பல்கலை பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19 ஆம் திகதி காட்டு யானை தாக்கியநிலையில், படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் 8 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

தொழில்நுட்ப பீடத்தின், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் கற்பிக்கும் விரிவுரையாளரான காயத்ரி தில்ருக்ஷி (Gayathri Dilrukshi) என்பவரே உயிரிழந்தவராவார்.

32 வயதான இந்த பெண் விரிவுரையாளர் கொழும்பு, களனி பகுதியைச் சேர்ந்தவராவார்.

அன்றைய தினம் யானையால் தாக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்

error

Enjoy this blog? Please spread the word :)