யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி பீட பெண் விரிவுரையாளர் காட்டு விலங்கு தாக்கிப் படுகாயம்!!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீடத்தின் பெண்
விரிவுரையாளர் ஒருவர், காட்டு விலங்கு தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.
அவர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்றிரவு இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை யானை அல்லது கரடி தாக்கியிருக்கவேண்டும் என்று தெரிவிக்கும் பொலிஸார், விசாரணை
இடம்பெறுவதாக குறிப்பிட்டனர்.
தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளரான தென்னிலங்கையைச் சேர்ந்த அவர், விகாரையில்
வழிபாட்டில் ஈடுபட்டு விடுதிக்கு திரும்பிய வேளை காட்டு விலங்கின் தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளார்.

