புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் அடர்ந்த காட்டில் ஆமிக்காரர்கள் கண்டுபிடித்தது என்ன? (Photos)

முல்லைத்தீவு மாவட்டமானது அதிகளவான இயற்கை வளங்கள் காணப்படுகின்ற ஒரு மாவட்டமாகும்.

அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஆட்சிக் காலத்திலே இயற்கை வளங்கள் வெகுவாக பராமரிக்கப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே…

இலங்கையிலேயே அதி கூடிய வனம் காணப்படுகின்ற ஒரு பகுதியாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதாக பலரும் பெருமை பேசி வந்தார்கள் இவ்வாறான நிலைமையில் தற்போது தொடர்ச்சியாக யுத்தத்தின் பின்னர் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக அளவில் இடம் பெற்று வருகின்றது..

குறிப்பாக கிரவல் அகழ்வு ,மணல் அகழ்வு ,கருங்கல் அகழ்வு இவ்வாறாக ஒருபுறமாக அழிக்கப்படுகின்ற இயற்கை வளங்கள் ஓடு முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிக அளவில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்ட வன பகுதிகளும் பல்வேறு இடங்களிலும் பல்வேறு தேவைகளுக்காக அழிக்கப்பட்டு வருகின்றது

வனப் பகுதிகளில் காணப்படுகின்ற பயன்தரு மரங்கள் சட்டவிரோதமாக அறுத்து விற்பனை செய்கின்ற நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது வன வள திணைக்களத்தினரின் ஆளுகையில் காணப்படும் இந்த வனப்பகுதிகளில் இடம்பெறும் இந்த செயற்பாடுகளை உரிய திணைக்களங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்ற விடயமாகும்

இந்த வகையிலான அம்பகாமம் வன பகுதியில் சட்டவிரோதமாக அறுக்கப்பட்ட ஒரு தொகுதி மரங்கள் குறித்த பகுதியில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

Image may contain: one or more people, tree, outdoor and natureImage may contain: one or more people, people sitting, tree, outdoor and natureImage may contain: tree and outdoor