புதினங்களின் சங்கமம்

கனரக வாகனத்தில் சிக்குண்டு நசுங்கிய சிறுவன்! பரிதாபமாக உயிரிழப்பு

கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு எதிர்பாராதவிதமாக சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள சேனைக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று மாலை கல்முனை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி தற்காலிக பாலத்தின் திருத்த வேலைக்காக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு குறித்த சிறுவன் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.