Vampan memesபுதினங்களின் சங்கமம்

இந்த முசுப்பாத்தியை யாரிடம் சொல்லிச் சிரிக்க!! திருநீறிலும் கொரோனா!!

தற்காலத்தில் யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரை அனைத்து இந்து ஆலயங்களிலும் திருநீறு தரிக்க முடியும் .

ஆனால் வவுனியாவில் பிரபல ஆலயமொன்று திருநீற்றினால் கொரோனா பரவலடையுமெனத் தெரிவித்து இப்படியான அறிவித்தலைக் காட்சிப்படுத்தியுள்ளது. திருநீற்றைக் காணவில்லை. #உண்டியல் மட்டுமே முன்னால் உள்ளது.

இந்துக்களின் சிவசின்னங்களுள் ஒன்றான திருநீற்றை நாயன்மார்களும் , மெய்யடியார்களும் மேனிலை தரும் உபாயமென மெச்சி நிற்க விஷேடமாக ஒரு ஆலய நிர்வாகம் மட்டும் இப்படியானதொரு அறிவிப்பை வைத்து பக்தர்களை முகஞ்சுழிக்க வைத்துள்ளமை துர்ப்பாக்கியமே!

“மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.” என்ற பாடலை வாயினால் பாடி திருநீற்றைத் தரிக்க முடியாத படி செய்து வைக்கப்பட்டுள்ள இவ்வறிவிப்பு மெய்ஞான பூர்வமானதா ? விஞ்ஞான பூர்வமானதா?