புதினங்களின் சங்கமம்

இராணுவ சிப்பாய்க்கு கொரோனா: மூன்று வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைப்பு!

இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்று வந்த மூன்று வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஹொரணை கந்தன பகுதியைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இராணுவத்தினர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருபவர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் பொருட்களை வாங்குவதற்காக சென்று திரும்பிய மூன்று வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவம் அதில் பணியாற்றிய 30பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.