கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு இடப்பற்றாக்குறையா? – வெளியாகிய அதிர்ச்சி தகவல்
நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருகின்ற நிலையில் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அங்கு 140 நோயாளர்கள் சிகிச்சைப் பெறுகின்றனர்.
அதிகபட்சமாக அனுமதிக்க முடியுமாக இருந்த அத்தனை நோயாளர்களையும் வைத்தியசாலை உள்ளீர்ப்பு செய்ததினால் புதிய நோயாளர்களை அனுமதிக்க முடியாத நிலைமை வரலாம் என விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

