புதினங்களின் சங்கமம்

மனிதர்களும் விலங்குளைப் போலதான்!! பிரசவம் பார்க்க வைத்தியர் தேவையில்லை!! மட்டக்களப்பு வைத்தியசாலை நிரூபித்துள்ளது!!

சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவை அப்படியே இங்கு நாம் தந்துள்ளோம்….
விலங்குகள் குட்டிகளை ஈனும்போது அவற்றின் அருகே நின்று இன்னொரு விலங்கு பிரசவம் பார்ப்பதில்லை.

அதே போன்று மனிதன் பிள்ளைகளை பெறும்போது எவரும் அருகிருந்து பிரசவம் பார்க்க தேவையில்லை என்பதையும், மனிதனும் விலங்குதான் என்பதையும் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிரூபித்தது/ சாதித்தது.

வாருங்கள் சாதனையை பார்க்கலாம்.

இன்று காலை 6.30 மணியளவில் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையிலிருந்து ஒரு தாய் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரசவத்துக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

அந்த தாயை மகப்பேற்று வைத்தியநிபுணர் சரவணன் அவர்கள் தனியார் வைத்தியசாலையில் பார்வையிட்டு வந்துள்ளார் என்ற அடிப்படையில் அவர் அந்த வைத்திய நிபுணரின் விடுதியாகிய 7 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

காலை 8.00 மணியளவில் அங்கு வந்த வைத்தியர் தாயிடம் விசாரணைகளை தொடங்கியபோது அந்த தாய் இலங்கையின் மற்றொருமாவட்டமான காலிக்கு சென்று ஊரடங்கில் சிக்குண்டு பின்னர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலான அவர்களின் தலையீட்டில் கடந்த 24 ஆம் திகதி காலியில் இருந்து ஏறாவூரிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

உடனடியாக அந்த விடுதியினுள் துள்ளி குதித்த அந்த வைத்தியர் அந்த தாயை அவசர அவசரமாக தள்ளுவண்டியில் ஏற்றி அங்கிருந்த மருத்துவ மாதுக்கள் மற்றும் தாதியருடன் இழுத்துக்கொண்டோடி வந்து வைத்தியசாலையில் covid 19 நோயாளிகளை பராமரிக்க தயார்படுத்தப்பட்டிருந்த அலகினுள் ஒரே தள்ளாக தள்ளி விட்டு அந்த குழாத்தினர் தப்பியோடி விட்டனர்.

அந்த தாய் காலியிலிருந்து வந்ததை மட்டுமே உள்வாங்கிய வைத்தியர் அந்த தாயின் பிரசவ வலி பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை.

வைத்தியர்களை உலகெங்கிலும் உள்ள மக்கள் கடவுளுக்கு நிகராக காண்கிறார்கள்.ஆனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பலர் அந்த வைத்தியசாலையை பணம் பார்க்கும் இடமாக காண்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட தாய்க்கு வைத்தியர் பார்வையிட்ட நேரத்தில் இருந்து 30 நிமிடங்களுக்குள் பிள்ளை பிறந்துவிடும் நிலையில் கருப்பை கழுத்து விரிந்திருந்தது

அந்த மகப்பேற்று விடுதியில் கொரோணா நோயாளி என சந்தேகிக்கப்பட்டால் உடன் பின்பற்றவேண்டிய செயன்முறைகள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அதற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் அந்த வைத்தியர் இவை எதனையும் கருத்திலெடுக்காது குறித்த தாயை covid 19 தனிமைப்படுத்தல் பிரிவுக்குள் கொண்டு சென்று தள்ளிவிட்டிருந்தார்.

அந்த தனிமைப்படுத்தல் அறையில் ஏற்கனவே ஒரு ஆண் நோயாளி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த covid 19 சிகிச்சை அலகு பிரசவம் பார்க்க கூடிய நிலையில் இல்லை.அங்கு போதுமான மறைப்புகள் இல்லை.அங்கு மருத்துவ மாதுக்கள் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

குழந்தை பிறந்தபின் குழந்தையினதும் தாயினதும் உயிர் காப்புக்கான உபகரணங்கள் எவையும் ஆயத்த நிலையில் இல்லை.அவை அங்கு இருக்கவேண்டிய அவசியமும் இல்லை.

இந்த நிலையில் குறித்த அலகினுள் 8.10 மணிக்கு கொண்டுசெல்லப்பட்ட தாய் பிரசவ வலியால் துடித்த நிலையில் திறந்தவெளியில் காலை 8.15 மணியளவில் குழந்தையை ஈன்றுள்ளார்.

அந்த தாயை covid 19 பராமரிப்பு அலகிற்கு கொண்டு சென்றவர்கள் அந்த அலகில் கடமையாற்றிய மற்றய தாதியினருக்கு நோயாளியின் எந்த நிலைமைகள் குறித்தும் விளக்கவில்லை.பொருத்தமான கையளித்தல் முறைகள் பின்பற்றபடவில்லை.இந்த்நிலையில்

குழந்தை ஒன்று அழுவதை கேட்டு அந்த தாயின் அருகில் ஓடிச்சென்ற covid 19 சிகிச்சை அலகின் தாதி செய்வதறியாது திகைத்துப்போனார்.

தன்னால் முடிந்தளவு பராமரிப்புகளை செய்து செய்யும் தாயையும் உயிராபத்திலிருந்து மீட்டெடுத்தார்.

அதன் பின்னர் பல மணி நேரங்களின் பின் வந்த வைத்தியர் குழந்தைக்கான தொப்புள் கொடி அறுத்தல் உட்பட்ட ஏனைய கருமங்களை செய்து முடித்தார்.

தெய்வாதினமாக குழந்தையும் தாயும் தப்பித்தனர்.