கொரோனா தொற்றாளர் சிகை அலங்காரம் செய்பவர் அவர் மூலமே கொரோனா தொற்று !!
கொழும்பு -வாழைதோட்டம் பண்டாரநாயக்க மாவத்தையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் சிகை அலங்காரம் செய்பவர் என்பதுடன் அவர் மூலமே கொரோனா தொற்று அதிகமானோருக்கு பரவியிருக்கக்கூடும் என தாம் சந்தேகிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பகுதியை சேர்ந்த 62 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

