மட்டு‘வில்அதிவிசேடம் வாங்கி அதிவேகமாகச் சென்றவர்கள் அவசரசிகிச்சைப் பிரிவில்!! (Photos)
அதி விசேஷம் வாங்கிக் கொண்டு
அதி வேகமாகச் சென்ற இருவர்
அவசர பிரிவில் ஆஸ்பத்திரியில்…!
மட்டக்களப்பில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் பலர் மதுபானம் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இவ்வாறு மதுபானம் வாங்கி வரும் வழியில் மட்டக்களப்பு- தாண்டவன்வெளி பிரதான வீதியில் வைத்து இரு மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கிய இளைஞர்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் சேதமாகியதுடன் மதுபானப் போத்தல் உடைந்து நொறுங்கியுள்ளது.
இது தொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




