புதினங்களின் சங்கமம்

கொரோனாவால் 1,430,453 பேர் பாதிப்பு – ஒரே நாளில் 7,000 பேர் பலி!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸின் தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.

இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 1,430,453 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் சுமார் 7,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,133 ஆக உயர்ந்துள்ளது. 301,385 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 10 லட்சத்து 47 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 47 ஆயிரத்து 894 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

உலக அளவில் இத்தாலியில் அதிக அளவாக 17,127 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதனைத் தொடர்ந்து ஸ்பெயின் அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. அங்கு 14,045 பேர் இறந்துள்ளனர். நோய்த்தாக்கம் அதிகம் உள்ள அமெரிக்காவில் 12,854 பேர் பலியாகி உள்ளனர். பிரான்சில் 10,328 பேரும், பிரிட்டனில் 6,159 பேரும், ஈரானில் 3,872 பேரும், சீனாவில் 3,333 பேரும் பலியாகி உள்ளனர்.