புதினங்களின் சங்கமம்

ரயிலில் சென்ற யாழ்ப்பாண இளைஞர்கள் மீது குருநாகலில் கடும் தாக்குதல்!!

தமிழ் இளைஞர்களை தாக்கிய சிங்கள கும்பலால் குருநாகல் புகையிரத நிலையத்தில் நேற்று நள்ளிரவு பதற்றம் நிலவியது.

தமிழ் சிங்கள புத்தாண்டு காரணமாக நேற்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட புகையிரதத்தில் இடநெருக்கடி காணப்பட்டது. ஆசனங்களை பிடிப்பதற்காக மக்கள் முண்டியடித்தனர்.

ஆசனமொன்றை பிடிப்பது தொடர்பில் தமிழ் சிங்கள இளைஞர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியது.
இதன் காரணமாக இரு பகுதியினரும் பொல்ககவெல பகுதியில் மோதலில் ஈடுபட்டனர்.

இதேவேளை மோதலில் ஈடுபட்ட சிங்கள தரப்பு குருநாகல் புகையிரத நிலையத்தில் இறங்குவதற்கு ஆயத்தமானபோது அவர்களுக்கு ஆதரவாக பொல்லுகளுடன் வந்த சுமார் பத்து பேர் அடங்கிய கும்பல் தமிழ் தமிழ் இளைஞர்களை சரமாரியாக தாக்கியது. இதனை தடுக்க முற்பட்ட புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தாக்கப்பட்டனர்.

இச் சமயத்தில் புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் புத்தி சாதூரியமாக செயற்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு பொலிசாரையும் வரவழைத்தனர்.

இச் சம்பவத்தில் பாடசாலை வீதி, மானிப்பாய் என்ற விலாசத்தை சேர்ந்த வீரசிங்கம் திவ்விய பிரகாஷ் என்ற இளைஞரும் வேறு இரண்டு இளைஞர்களும் காயமடைந்தனர்.

இச் சம்பவத்தால் புகையிரதம் இரண்டு மணி நேரம் தாமதமானது.
சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.