ஜோதிடம்

இன்றைய இராசி பலன் (10.04.2019)

மேஷம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாக சரி செய்வீர்கள். அழகு, இளமைக் கூடும். பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாக மான நாள்.

ரிஷபம்: இன்றும் சந்திரன் ராசிக்குள் தொடர்வதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போதுகொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என் றெல்லாம் வருத்தப்படுவீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

கடகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக பரிந்துப் பேசுவீர்கள். சிறப்பான நாள்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

கன்னி: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்
கள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும்.விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில்புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில்எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோ கத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சி நீடிக்கும் நாள்.

தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அமோகமான நாள்.

மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தை
விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.

கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. விருந்தினர்களின் வருகையால் உற்சாகம் தங்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மீனம்: திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள்.