கொரோனா வைரஸ் தாக்காமல் தம்பதிகள் உடல் உறவு கொள்ள முடியுமா??? முடியாதா??? பல்கலை பேராசிரியர் விளக்கம்!!

கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க சமூக விலகல் மிகப் பாதுகாப்பானதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை உலகின் பல நாடுகள் லொக் டவுன் செய்யப்பட்டுள்ளன. சமூக விலகலை நோக்கமாக கொண்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து தப்பிக்க சமூக விலகல் பரிந்துரைக்கப்பட்டு, எல்லோரும் வீடுகளில் முடங்கியுள்ள இந்த காலப்பகுதியில் உடலுறவில் ஈடுபடலாமா என்பது பலருக்குமுள்ள கேள்வியாக இருக்கும்.

சமூக விலகலின் போது, தம்பதியர் உடலுறவில் ஈடுபடுவதில் ஆபத்தில்லையென்கிறார் பிரிட்டனின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பேராசிரியர் போல் ஹண்டர்.

காதலோ, ரொமான்ஸோ, உடலுறவோ பாதுகாப்பற்றது அல்ல என தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், நீங்கள் முறையற்ற உறவுகளை பேணாதவர் என்றால்தான் அது பொருந்தும். அதேவேளை, உங்கள் பார்ட்னர் 70 வயதிற்கு மேற்படாதவராகவும், உடல்நிலை சரியில்லாதவராகவும் இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சமூக விலகலை பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த காலத்தில், வீடுகளில் லவ் மேக்கிங் நன்றாக இல்லையென்றால் அது மிகப்பெரிய உளவியல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார். எனவே, பாதுகாப்பான தம்பதியர் உடலுறவு வைத்துக் கொள்வதில் எந்த பிரச்சனையும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

“நீங்கள் அறிகுறிகள் தென்படாமல், சமூக ரீதியாக விலகியிருந்தால்,
நீங்கள் ஒன்றாக வாழும்போது உங்கள் துணையுடன் தொடர்ந்து உடலுறவு கொள்ள முடியாது என்பதற்கு எந்த காரணங்களும் இல்லை” என்று அவர் கூறினார்.

“ஆனால் உங்கள் பாலியல் வாழ்க்கை மிகவும் சிக்கலானது- அதாவது திருமண உறவிற்கு வெளியில் உடலுறவு கொள்பவர், பல நபர்களுடன் உடலுறவு கொள்ளபவர் என்றால் உடலுறவிற்கு எதிராக அறிவுறுத்தப்படுகிறது” என்றார்.

70 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஆபத்தான சுகாதார நிலைமைகள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்கள் பல நபர்கள் சம்பந்தப்பட்ட உடலுறவைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.

error

Enjoy this blog? Please spread the word :)