யாழில் பரபரப்பு!! கடற்படைச் சிப்பாய்க்கு சூலத்தால் குத்தி படுகாயப்படுத்திய இளைஞன்!!
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் சிவில் உடையில் சென்ற கடற்படை சிப்பாய்க்கும் இளைஞர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பில், சூலத்தால் குத்தப்பட்டு கடற்படை சிப்பாய் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர் அந்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தினர் என்றும், அதில் இளைஞர் காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காயமடைந்த சிப்பாயையும், கடற்படையினரால் நையப்புடைக்கப்பட்ட இளைஞரையும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்த்தனர்.

