கனடாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் பிரதேசத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா! அச்சத்தில் தமிழர்கள்!!
கனடாவின் ஒன்ராறியோவில் கொரோனா தொற்றிற்கு இலக்கான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டொரொன்டோவை சேர்ந்த 50 வயது மனிதர் இத்தாலியில் இருந்து வந்தவர்.அவர் நோர்த் யார்க் ஜெனரல் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
60 வயது பெண் ஈரானில் இருந்து திங்கடகிழமை டொரோண்டோ வந்துள்ளார். .அவருக்கு றிச்மன்கில்மருத்துவமனையில் கொரோன தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மிஸ்சுசாகாவை சேர்ந்த ஒரு ஜோடிகலிபோர்னியாவில் இருந்து வந்துள்ளார்கள். அவ் இருவருக்கும் கொரோன தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
டொரோண்டோ நபர் ஒருவர் இத்தாலியில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கொரோன தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் லாஸ் வேகாஸில் ஒருவருக்கும் கொரோன தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் ஆறு பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்றைய நிலவரப்படி, ஒன்ராறியோவில் மொத்தம் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

