கச்சதீவுக்குச் சென்றவர்களது படகுகளைக் காணவில்லை- 100 பேர் தீவில் பரபரப்புடன் தவிப்பு!! (Photos)
கச்சதீவு திருவிழாவிற்காக சென்றவர்களது படகுகள் காணாமல் போயுள்ளமையால் சுமார் 100 பேர் வரையில் கச்சதீவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கச்சதீவு, அந்தோனியார் திருவிழாவிற்கு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்ற படகுகள் அடங்கலாக 10 படகுகள் காணாமல் போயுள்ளன.
கடற்கரையில் கட்டிவிடப்பட்ட நிலையில் அவை காணாமல் போயுள்ளமையால் அங்குள்ளவர்கள் திரும்ப முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் படகுகளைத் தேடும் பணியை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, 7 வரையான படகுகள் இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.




