மாவீரரின் தாய்க்கு பாண் கொடுத்து படம் எடுத்த தமிழரசுக் கட்சி வாலிபர்கள்!! (Photos)
தமிழரசுக் கட்சியின் வாலிபர்களின் திருவிளையாடல்கள் தொடர்பாக முகப்புத்தகத்தில் கடும் விமர்சனங்கள் உருவாகியுள்ளன. அவற்றில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய அரசியலில் தடம் மாறி பயணிக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கீழ் மட்ட செயற்பாடுகளில் இதுகும் ஒன்று……
கட்சியின் பனர் பதாகை போட்டு எம் தாய்க்கு பாண் கொடுத்து அதை பேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் அணியினர்…….
இதற்காகவா இத் தாயின் பிள்ளைகள் களத்தில் மாவீரர் ஆனார்கள்.
சிந்தியுங்கள் …
இந் நிலையை மாற்றி அமைக்க ஒரு மாற்றத்தை உருவாக்குங்கள்.

