Vampan memesபுதினங்களின் சங்கமம்

ஓடுங்கோ! ஓடுங்கோ! மட்டக்களப்புக்கு கொரோணா வருகிறது ஓடுங்கோ!

ஐயா கௌரவ வியாளேந்திரன் அவர்களே!

ஐயா வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்களே!

ஐயா சிவனேசதுரை சந்திரகாந்தன்/பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்களே!

ஐயா இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களே!

ஐயா அருண் தம்பிமுத்து அவர்களே!

ஐயா விஸ்னுகாந் அவர்களே!

ஐயா கோவிந்தன் ஜனா கருணாகரன் அவர்களே!

மற்றும் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களே!

உங்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள்.

நீங்கள் அனைவரும் அரசோச்ச நினைக்கின்ற மட்டக்களப்பு மண் “கோரோணாவால்” அழியப்போகிறது.

மட்டக்களப்பு மாந்தீவை கொரோணா வைரசு தாக்கத்துக்குள்ளானோரை தங்க வைத்து பராமரிக்கின்ற இடமாக மாற்றுவதற்கு மட்டக்களப்பு அரச மருத்துவர் சங்கம் விடாப்பிடியாக முன்னெடுத்துவருகின்ற செயற்பாடுகள் வெற்றியளித்துவிட்டன.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் மட்டக்களப்பு மருத்துவ சங்கத்தின் பிரதானி அழகையா லதாகரன் அவர்களும் இன்னும் சில மருத்துவர்களும் தமது தாய்ச்சங்க பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சு செயலாளரை வீடு தேடிச்சென்று சந்தித்ததன் பிரகாரம் மாந்தீவை மாற்றுவதற்கான செயற்பாடுகள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்றைய நாளில் மட்டக்களப்பு விமான படையின் விசேட அணி மாந்தீவிற்கு சென்று அங்குள்ள நிலைமைகளை பரிசீலனை செய்துவருகின்றது.அங்குள்ள கட்டடங்களை புனரமைப்பது தொடர்பிலும் மாந்தீவுக்கான போக்குவரத்து மார்க்கத்தை செப்பனிடும் முறைமை தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.

விமானப்படையின் நிபுணர்கள் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டுவருகின்றனர்.

கொரோனா வைரசு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட முதாவது இலங்கை பிரஜை இத்தாலியில் இனம் காணப்பட்ட இன்றைய நிலையில்,வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோரை 15 நாட்கள் தடுத்து வைத்து அவதானித்தல் எனும் சுகாதார அமைச்சின் தீர்மானத்துக்கமைய காரியங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான பூரண அனுசரணையை மட்டக்களப்பு அரச மருத்துவ சங்கத்தின் பிரதானிகளான அழகையா லதாகரன்,அச்சுதன்,சுகுணன்,கௌரிசங்கர் மற்றும் சுகைல் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.

மொத்தத்தில் மட்டக்களப்பு கொரோனாவால் அழியலாம் என்பது எமது எதிர்வுகூறல்.காரணம் இன்றுவரை கொரோணா வைரஸ் எத்தகைய மார்க்கத்தின் மூலம் பரம்பலடைகின்றது என்பது உறுதிப்படுத்த முடியாத விடயமாகவே உள்ளது.

நாம் சொல்வதை சொல்லிவிட்டோம்.முடிவு உங்கள் கையில்.

நன்றி

எல்லாளன் மட்டு அம்பாறை

Image may contain: sky and outdoor