புதினங்களின் சங்கமம்

இஞ்சி பயிர் செய்கையில் சாதித்துக் காட்டிய புதுக்குடியிருப்பு பெண்கள்

முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தின் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கமைவாக உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றின் நிதியுதவியுடன் புதுக்குடியிருப்பு பெண்கள் முயற்சியாளர் சங்க பயனாளிகளினால் புதுக்குடியிருப்பு விவசாய போதனாசிரியர் பிரிவில் தூவல் நீர் பாசனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரி துண்டை இஞ்சி பயிச்செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அறுவடை வயல் விழாவானது சிறப்பாக இடம்பெற்றுள்ளது இன்று காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.