புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி மாணவர்கள் பலியாகும்வரை காத்திருக்கும் புகையிரத திணைக்களம்!!

கிளிநொச்சி- கரடிப்போக்கு சந்தியில் உள்ள புகைரத கடவையின் எச்சாிக்கை சமிக்ஞை தொடா்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும், பொறுப்புவாய்ந்தவா்கள் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இந்த புகைரத கடவையை தாண்டி தினசாி ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனா். பல நுாற்றுக்கணக்கான மாணவா்கள் பயணம் செய்கின்றனா். மேலும் அருகில் பாடசாலைகளும் அமைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த எச்சாிக்கை சமிக்ஞை தொடா்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதனால் மக்கள் அச்சத்தில் நின்று கொண்டிருக்கின்றனா். ஆனாலும் இதுவரை எந்த விபத்துக்களும் இடம்பெறவில்லை. இந்நிலையில் விபத்து நடந்து யாரும் செத்தால்தான் சாி செய்வாா்கள் பேலுள்ளது என மக்கள் விசனம் தொிவித்துள்ளனா்.

இந்த சம்பவத்துக்கு ரயில்வே திணைக்களம் மட்டும் பொறுப்பல்ல மாவட்டத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்கள் கவனத்திற்கு.