புதினங்களின் சங்கமம்

சி.சி.ரீவி கமராவில் சிக்கிய சிங்களக் கள்ளன் ( Video)

வெயாங்கொடை நகரில் அமைந்துள்ள கைப்பேசி விற்பனை நிலையமொன்றில் நுழைந்த நபரொருவர் அங்கிருந்த பெறுமதிவாய்ந்த கைப்பேசி ஒன்றினை திருடிச் சென்றுள்ளார்.

கைப்பேசியொன்றை புதுப்பிப்பதற்காக குறித்த சந்தேகநபர் கடந்த 22 ஆம் திகதி குறித்த கைப்பேசி விற்பனை நிலையத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சந்தேகநபரை தேடி வெயாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர் விற்பனை நிலையத்தில் இருந்து கைப்பேசியை எடுத்துச் செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.