யாழில் சமுர்த்தி முகாமையாளரின் காருக்கு தீ வைத்த மர்மநபர்கள் (Photos)
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் வீடு ஒன்றுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள் அங்கு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&
வீட்டு உரிமையாளரின் காணிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத இருவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தை உணர்ந்த வீட்டாரும் அயலவர்களும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற போது வீட்டார் உறக்கத்தில் இருந்ததாகவும் தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

