5 பிள்ளைகளின் தாயாரை பலியெடுத்த தென்னிலங்கை பஸ் விபத்து – CCTV காணொளி
உடுகம பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் நின்றிருந்த பெண் ஒருவர் மீது தனியார் பஸ் ஒன்று மோதிய சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கெமரா காட்சிகள் வௌியாகியுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் குறித்த பெண் உயிரிழந்தார்.
40 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
குறித்த பெண் தனது பிள்ளையை மேலதிக வகுப்பில் விட்டு விட்டு மீண்டும் வீடு நோக்கி சென்ற போது இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி நேற்று (17) உடுகம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
பின்னர் அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உடுகம நீதவான் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

