புதினங்களின் சங்கமம்

யாழ்.மாநகர குளத்தில் ஆண் ஒருவரின் சடலம்!! (Photos)

யாழ்ப்பாணம் ஈச்சமொட்டை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டறியப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.

60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலமே குளத்தில் காணப்படுகிறது.

குளத்தில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பிரதேச மக்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இன்று காலை தகவல் வழங்கினர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்கும் பணி இடம்பெற்று வருகிறது.