கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்.அராலி கிழக்கு வட்டுக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் தாயும் தந்தையும் வெளியில் சென்றிருந்த வேளை குறித்த சிறுவன் தனிமையில் விளையாடிக் கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
வீட்டுக்கு வந்த தாயும் தந்தையும் மகனைக் காணாது தேடிய பொழுது அவர் கிணற்றில் மிதந்து கொண்டு இருந்துள்ளார்.
சிறுவனை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் குக தீசன் நருஜன் 5 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

