ஜோதிடம்

இன்றைய இராசி பலன் (30.03.2019)

மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசு வீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள் ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு களை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

கடகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்.தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபா ரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டு வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகை கள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

சிம்மம்: சாணக்கியத் தனமாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்

கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தரு வார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வரக்கூடும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப் பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந் தவர்கள் ஒத்தாசையாக இருப் பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதி கிட்டும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். குடும் பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

கும்பம்: எடுத்த வேலை களை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளை கள் பிடிவாதமாக இருப் பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அசைவ, கார உணவு களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையா ட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.