புதினங்களின் சங்கமம்

யாழில் மீண்டும் கொடூரம்!! ரயில் மோதி குடும்பஸ்தர் பலி!! (Photos)

காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த தபால் ரயில் ஆத்திசூடி பிள்ளையார் கோயிலுக்கு (வெளிநாட்டு பிள்ளையார்) அருகில் உள்ள ரயில் கடவையூடாக கடந்த வயோதிபரை மோதி தள்ளியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த கடவையில் கேற் இல்லாதபோதும் சமிக்ஞை விளக்கு மட்டுமே உள்ளது. ரயில் வரும்போது ஒலி எழுப்பியது. இவ்வாறான நிலையிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் உடல் ரயிலில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த கடவைக்கு சற்று தூரத்தில் யாழ் இந்து மகளிர் கல்லூரி உள்ளதால் அதிகம் மாணவர்கள் செல்லும் கடவையாக உள்ளதால் இங்கு கேற் அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது எனினும் இதுவரை பொருத்தப்படவில்லை.

அண்மையில் 2 மாடுகள் ரயிலில் மோதி பலியானமையும் குறிப்பிடத்தக்கது.

Image may contain: trainNo photo description available.Image may contain: one or more people, people standing and outdoor