Home புதினங்களின் சங்கமம் 3 பிள்ளைகளின் தந்தையை வாகனத்தால் இடித்து கொன்ற புலம் பெயர் தமிழ் காவாலி!! உருளைக்கிழங்கு தோட்டத்திற்குள்...

3 பிள்ளைகளின் தந்தையை வாகனத்தால் இடித்து கொன்ற புலம் பெயர் தமிழ் காவாலி!! உருளைக்கிழங்கு தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த போது ட்ரோன் உதவியுடன் பிடிபட்டான்!! ஆறரை வருட சிறை!! தண்டனை போதாது என பலியானவரின் குடும்பத்தினர் கதறல்!! நடந்தது என்ன? வீடியோ

கனடாவில் மூன்று பிள்ளைகளின் தந்தையை வாகன விபத்தில் கொன்ற 19 வயது இளைஞருக்கு 6.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு தமக்கு நீதி வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். விட்சர்ச் ஸ்டோபில் பகுதியில் கடந்த 2025 ஆகஸ்ட் மூன்றாம் திகதி இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில், 19 வயதான ஜெயவின் கிருபானந்தன் என்பவருக்கு நியூமார்க்கெட் நீதிமன்றம் இன்று இந்தத் தண்டனையை வழங்கி உள்ளது.

மணிக்கு 80 கிலோமீட்டர் வேகக் கட்டுப்பாடு கொண்ட நெடுஞ்சாலை 48-இல் எதிர் திசையில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தைச் செலுத்திய அவர், 35 வயதான ஆன்ட்ரூ கிறிஸ்டிலோவின் குடும்பத்தினர் பயணித்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதினர். இதில் ஆன்ட்ரூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மனைவி கிறிஸ்டினா மற்றும் ஏழு, ஆறு, நான்கு வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளும் படுகாயம் அடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு உருளைக்கிழங்கு தோட்டத்தில் பதுங்கி இருந்த கிருபானந்தனை 9 மணி நேர தேடுதலின் பின்னர் பொலிஸார் ட்ரோன் உதவியுடன் கைது செய்தனர். ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தைக் கழித்து அவர் இன்னும் 4.5 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியுள்ளதோடு, 12 ஆண்டுகள் வாகன ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறை தனது சகோதரனுக்கு அநீதி இழைத்து விட்டதாகத் தெரிவித்துள்ள ஆன்ட்ரூவின் சகோதரர் ஜோர்டான், அதீத வேகத்தால் மரணத்தை ஏற்படுத்துவோருக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கட்டாய சிறைத் தண்டனை வழங்கக் கோரி மனு ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதற்கு இதுவரை 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஆபத்தான சாரதிகளுக்கான தண்டனைகளை அதிகரிக்கும் ‘ஆன்ட்ரூஸ் சட்டம்’ என்ற புதிய சட்டத்தை ஒன்ராறியோ அரசு கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments