Home புதினங்களின் சங்கமம் இலங்கைக்கு சாட்சியாக வரும் முக்கிய பெண் புலனாய்வாளர் ! நாமலின் நிலை அதோ கதிதானா?

இலங்கைக்கு சாட்சியாக வரும் முக்கிய பெண் புலனாய்வாளர் ! நாமலின் நிலை அதோ கதிதானா?

உலகின் மிகப்பெரிய பெருநிறுவன ஊழல் மோசடிகளில் ஒன்றை வெளிக்கொணர உதவிய பிரான்ஸ் நாட்டின் தடயவியல் கணக்கியல் நிபுணர் ஒருவர், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான எயார்பஸ் (Airbus) இலஞ்ச வழக்கில் சாட்சியமளிப்பதற்காக இலங்கைக்கு வரவுள்ளார்.

இந்த முக்கிய வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பெயரிடப்பட்டுள்ள பிரதான சாட்சிகளில் ஒருவராக, ‘ஃபோரன்சிக் ரிஸ்க் அலையன்ஸ்’ (Forensic Risk Alliance – FRA) நிறுவனத்தின் பாரிஸ் அலுவலகத்தின் தலைவரும் பங்குதாரருமான யூசர் கலீல் (Yousr Khalil) பெயரிடப்பட்டுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட எயார்பஸ் நிறுவனம் தொடர்பான விரிவான பன்னாட்டு விசாரணையில் யூசர் கலீல் முக்கிய பங்கு வகித்தார். இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பல நாடுகளில் இடம்பெற்ற விமானக் கொள்வனவு ஒப்பந்தங்கள் குறித்து இந்த விசாரணை ஆராய்ந்தது.சர்வதேச ஊடகத் தகவல்களின்படி, குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ள மற்றொரு முக்கிய சாட்சியான எயார்பஸ் நிறுவனத்தின் உப தலைவர் கார்ல் ஹென்னெஸியுடன் (Karl Hennessee) இணைந்து யூசர் கலீலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த எயார்பஸ் விசாரணையின் மூலம், விமான விற்பனையுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிமாற்றங்களின் உலகளாவிய வலையமைப்பு ஒன்று அம்பலப்படுத்தப்பட்டது.

சுமார் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டே இந்த விசாரணையின் இலங்கைப் பிரிவு அமைந்திருந்தது. இக்கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சப் பணம் குறித்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன (தற்போது காலமாகிவிட்டார்) பேச்சுவார்த்தை நடத்தியதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குற்றப்பத்திரிகையின்படி, குறித்த விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய இலஞ்ச ஒப்பந்தத்தின் ஊடாகப் பெறப்பட்ட பணத்தை நாமல் ராஜபக்ஷ பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments