Home புதினங்களின் சங்கமம் தனது அலுவல நண்பிக்கு குடை பிடித்துச் சென்ற குடும்பஸ்தர்! விவாகரத்துக்கு ஆயத்தமான மனைவி! நடந்தது என்ன?

தனது அலுவல நண்பிக்கு குடை பிடித்துச் சென்ற குடும்பஸ்தர்! விவாகரத்துக்கு ஆயத்தமான மனைவி! நடந்தது என்ன?

தென் மாகாணத்தின் நகரமொன்றில், பெய்த கடும் மழையின் போது சக பெண் ஊழியருக்குக் குடை பிடித்து உதவிய அரச உத்தியோகத்தர் ஒருவர், தொலைக்காட்சி செய்தியால் விவாகரத்து வரை சென்று, இறுதியில் சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியால் தனது குடும்ப வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொண்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்க்களில் பேசுபொருளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தென் மாகாணத்தைச் சேர்ந்த குறித்த நபர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். கவர்ச்சியான தோற்றம் கொண்ட இவர் மீது, மனைவிக்கு இயல்பாகவே சற்று சந்தேகப் பார்வை இருந்து வந்துள்ளது.

சக பெண் ஊழியருக்குக் குடை பிடித்து உதவிய அரச உத்தியோகத்தர்வழக்கமாக மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் செல்லும் இவர், அண்மையில் பெய்த தொடர் மழையால் பேருந்தில் செல்லத் தொடங்கினார். இதற்காக மனைவியே அவருக்குப் பெரிய குடை ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மனைவி தனது பிள்ளைகளுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, காலி நகர மழை குறித்த விசேட செய்தி ஒளிபரப்பாகியுள்ளது.

அதில், தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் ஒரே குடையின் கீழ் நடந்து செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. பிள்ளைகளும் “அதோ அப்பா!” எனக் கூச்சலிட, மனைவி கடும் அதிர்ச்சியடைந்தார்.

அதிகாலையில் குடும்பத்தை காவு கொண்ட தீ விபத்து ; பிரேதப் பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்
அதிகாலையில் குடும்பத்தை காவு கொண்ட தீ விபத்து ; பிரேதப் பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்
அன்று இரவு கணவர் வீடு திரும்பியதும், மனைவி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விவாகரத்துப் பெற்று ஊருக்குச் செல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.

சக பெண் ஊழியரை, வீதியின் மறுபுறத்தில் காத்திருந்த அவரின் கணவரது வாகனத்தில் ஏற்றிவிடுவதற்காகவே குடை பிடித்துச் சென்றதாகக் கணவர் கூறிய விளக்கத்தையும், சம்பந்தப்பட்ட பெண் தொலைபேசியில் அளித்த விளக்கத்தையும் மனைவி ஏற்க மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, வார இறுதியில் கணவரின் அலுவலக நண்பர்கள் இருவர், சம்பவம் நடந்த இடத்திலிருந்த சிசிடிவி கமரா காட்சிகளைச் சேகரித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர். அந்தப் பெண் தனது கணவரின் காரில் ஏறும் வரை மட்டுமே குறித்த நபர் குடை பிடித்து உதவியது அந்தக் காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

உண்மையை உணர்ந்த மனைவியின் சந்தேகம் நீங்கியதையடுத்து, குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி திரும்பியது. “சிசிடிவி காட்சிகள் மட்டும் இல்லையென்றால் என் குடும்ப வாழ்க்கையே முடிந்திருக்கும்” என நிம்மதிப் பெருமூச்சு விட்ட கணவர், இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் குடும்பத்தினருக்குச் சிறப்பு விருந்தும் அளித்துள்ளாராம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments